சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்
ஹவுதிகளின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் சில பகுதிகளுக்கான பயண எச்சரிக்கையை ஜப்பான் அதிகரித்துள்ளது.
அதன்படி, சவுதி அரேபியாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு முழு இராச்சியத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம், வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கான எச்சரிக்கையை நிலை 1 இலிருந்து 2ஆக உயர்த்தியுள்ளது.
3ஆம் நிலை எச்சரிக்கை
ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் ஹவுதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் இதில் அடங்கும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஏமன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் 3ஆம் நிலை எச்சரிக்கை நீடிக்கின்றன. அப் பகுதியில் ஜப்பானிய நாட்டினர் அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏமனில் சண்டை தொடர்வதால் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று எச்சரித்த அமைச்சகம், பயணிகள் மிகவும் அவசியமானால் தவிர சவுதி விமான நிலையங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது அணுகுவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் ஜப்பானிய நாட்டினர் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |