இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் நிதியமைச்சர் : ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு
ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவர் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் அவர் இருதரப்பு பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கை தூதுவர்
சுசுகி ஷுனிச்சியின் இந்த விஜயத்துக்கு முன்பாக, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரொட்னி எம். பெரேரா, டோக்கியோவில் உள்ள நிதி அமைச்சில் அவரை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இதன் போது, ரொட்னி எம். பெரேரா, சுசுகி ஷுனிச்சிக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிதி அமைச்சர்
ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, யில் தங்கியிருக்கும் காலத்தில் நாடாளுமன்றம், ஜயவர்தன மையம், சிறி ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |