ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!
Ranil Wickremesinghe
University of Sri Jayawardenapura
By Kathirpriya
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிலவி வந்த துணைவேந்தர் பதவி வெற்றிடத்திற்கு புதிய துணைவேந்தராக மூத்த பேராசிரியர் பத்மலால் எம். மானே நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மூன்று வருட காலத்திற்கு பதவி
அதுமாத்திரமல்லாமல் அதிபரினால் மூன்று வருட காலத்திற்கு இந்த பதவி பேராசிரியர் பத்மலாலிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
புதிதாக பதவியேற்றுள்ள பேராசிரியர் பத்மலால் எம். மானே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி