ஜீவன் தொண்டமான் நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாகவே இவர்கள் நீதிமன்றில் முன்னியாகி உள்ளனர்.
சீ.சி.டிவி காட்சிகளை பரிசீலனை
இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீ.சி.டிவி காட்சிகளை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக வழக்கறிஞர் பெருமாள் ராஜதுரை முன்னிலையாகியிருந்தார்.
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் சார்பாக பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
