பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓரங்கட்டியவர் இவரா..!
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பணக்கார பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார்.
டெஸ்லா மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்த காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
எனவே, எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
முதலிடத்தை பிடித்தது யார்
உலகசந்தையில் அமேசானின் பங்குகள் 2022யில் இருந்து ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்தன இதேவேளை டெஸ்லாவின் பங்கு 2021யில் இருந்து 50 சதவீத அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. இதன்மூலம் எலான் மஸ்க்கினை பின்னுக்குத் தள்ளி பெசோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக,எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் பெசோஸ் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |