யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல்: ஜேர்மனியில் பரபரப்பு
Germany
World
By Dilakshan
ஜேர்மனியில் பெர்லின் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலமொன்றின் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகின்றது.
குறித்த வழிப்பாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த ஆலயத்தை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அத்துடன், இந்த தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட மர்ம கும்பலை காவல்துறை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்