ஜெரோம் பெர்னாண்டோ சிஐஏ உளவாளி - வசந்த பண்டார
பௌத்த மதத்தை பகிரங்கமாக இழிவுபடுத்திய ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் சிஐஏ உளவாளி என தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அமைப்பாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
Born Again என்பது CIA நாடுகளை சீர்குலைக்க பயன்படுத்தும் ஒரு கருவி என்றும், அது தொடர்பான அறிக்கை தொடர்பாக ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க திருச்சபையிடம் கூட இல்லாத பணம்
கத்தோலிக்க திருச்சபையிடம் கூட இல்லாத அளவுக்கு ஜெரோம் பெர்னாண்டோவிடம் எப்படி இவ்வளவு பணம் இருக்கிறது என்பது கேள்விக்குறியே என்றும் அவர் சந்கேம் வெளியிட்டார்.
இந்த நாட்டிற்குப் பின்னால் பலசாலிகள் பலர் இருப்பதாகவும், ஜெரோம் பெர்னாண்டோ மட்டுமே கண்ணுக்குத் தெரியும் முகமாக இருந்தாலும், பின்னால் பல சக்திவாய்ந்தவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகமொன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 1 மணி நேரம் முன்
