கட்டுநாயக்காவில் தரையிறங்கிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் குடும்பம்
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Sumithiran
பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்து நேற்று (02) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நிலையில் அவருக்கு பயணத்தடையை திங்களன்று காவல்துறையினர் பெற்றநிலையில் அவர் முதல்நாள் ஞாயிறு அன்று நாட்டை விட்டு வெளியேறி இருந்தமை தெரிந்ததே.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்