இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு

India Jharkhand
By Sumithiran Jan 12, 2025 01:33 AM GMT
Report

  பாடசாலை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றுமாறு தெரிவித்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவின்(india) ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பாடசாலையில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பேனா தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர்.

வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வந்த மாணவிகள்

இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், தங்கள் மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு | Jharkhand School Forces 100 Girls To Remove Shirts

பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 11) புகார் அளித்தனர். புகாரில் அவர்கள் தெரிவித்ததாவது,

சுகாதாரத் துறையில் அரசியல் தலையீடு : வெடித்தது புதிய சர்ச்சை

சுகாதாரத் துறையில் அரசியல் தலையீடு : வெடித்தது புதிய சர்ச்சை

பெற்றோர் கொதிப்பு

ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : பெற்றோர்கள் கொதிப்பு | Jharkhand School Forces 100 Girls To Remove Shirts

புகாரை விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.    

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை : கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை : கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி