தலைமைக்கு தெரியாது கூட்டமைப்புக்குள் அரங்கேறும் நாடகம் - சம்பந்தன் அதிருப்தி
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan).
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், அதற்கு எதிராக கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
எனினும் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேறியதுடன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேயராகத் தொடர்ந்து பதவி வகிக்கவும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.