இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு

Pomegranate Sri Lanka Japan Sri Lanka Relationship Japan Graduates
By Sathangani Jul 19, 2024 04:12 AM GMT
Report

ஜப்பானில்(Japan) தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத் துறையில் இலங்கை (Sri Lanka) பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் அதிபரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் மீண்டும் இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஜப்பான் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 

இலங்கைக்கு வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழுவினர் நேற்று (18) அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) சந்திப்பில் ஈடுபட்ட போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

நோய் அறிகுறி இருந்தால் வைத்தியசாலையை நாடுங்கள்...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நோய் அறிகுறி இருந்தால் வைத்தியசாலையை நாடுங்கள்...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடன் மறுசீரமைப்பு 

அத்துடன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) தெரிவித்தார்.

இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு | Job Opportunity For Sl Graduates In Japan Tech Sec

சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை எட்டியதன் ஊடாக அதிபர் ரணிலின்  தலைமைத்துவத்தின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்பட்டு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை தொடர்பிலும் ஜப்பான் பிரதிநிதிகள் அதிபர் ரணிலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

யாழ் மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் : வைத்தியர் அர்ச்சுனா

யாழ் மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் : வைத்தியர் அர்ச்சுனா

இலங்கைக்கு வழங்கிய ஆதரவு

இதேவேளை கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு ஜப்பான், இலங்கைக்கு வழங்கிய ஆதரவை அதிபர் ரணில் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

கல்வி, விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அதிபர் ரணில் தெரிவித்தார்.

இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு | Job Opportunity For Sl Graduates In Japan Tech Sec

அதற்காக தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய ஒத்துழைப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மீள ஆரம்பிப்பது முக்கியம் எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு கப்பல்துறை இலங்கைக்கு பெறுமதிமிக்க நிறுவனமாக இருப்பதால் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும்  ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் தீரா பிரச்சினைகள்: கொழும்பில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

அரச ஊழியர்களின் தீரா பிரச்சினைகள்: கொழும்பில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

இலகு தொடருந்து திட்டம்

இதேவேளை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறை அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு | Job Opportunity For Sl Graduates In Japan Tech Sec

கடந்த ஆட்சியில் இடைநடுவில் நிறுத்தப்பட்டதும், கொழும்பு (Colombo) நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த திட்டமான இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதற்கு சாத்தியமாக உள்ள இடங்கள் குறித்து ஆராய நடவடிக்கை எடுப்பதாகவும்  ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுவசதி மற்றும் பிற நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை செயற்படுத்துவதில் அரச - தனியார் கூட்டு முயற்சியின் (PPP) முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா இழைத்த பெரும் தவறு

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா இழைத்த பெரும் தவறு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

இலங்கை அரசாங்கம் அதன் கொள்கைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க சுற்றாடல் நட்பு திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு | Job Opportunity For Sl Graduates In Japan Tech Sec

ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்காக தொழில்நுட்பத் துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் அதிபரிடம் தெரிவித்தனர்.

மேலும், காபன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக மேம்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை உள்ளடக்கிய கூட்டு கார்பன் குறைப்பு பொறிமுறை (JCM) குறித்து ஜப்பானிய பிரதிநிதிகள் அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

தென்னிலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்: ஏழு பெண்கள் கைது

தென்னிலங்கையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதிகள்: ஏழு பெண்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024