றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனத்தில் புதிய வாய்ப்பு! இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க “றீ(ச்)ஷா பேப்பர்” காகித தொழிற்சாலை முன்வந்துள்ளது.
நாட்டில் தொழிற்சாலை துறையில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய வழியை றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனம் வழங்கவுள்ளது.
இதனடிப்டையில், உற்பத்தி மேற்பார்வையாளர்கள், இயந்திர இயக்குனர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைக்காக உள்ளெடுக்கப்படவுள்ளனர்.
மேற்படி தொழிற்துறையில் ஆர்வமுள்ளவர்கள் 11.10.2024 அன்று காலை 10.00 மணிக்கு கைத்தொழிற்பேட்டை, அச்சுவேலியில் அமைந்துள்ள காகித தொழிற்சாலையில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளுங்கள்.
குறித்த தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் தகுதிகள் கோரப்பட்டுள்ளன.
1. உற்பத்தி மேற்பார்வையாளர்கள்
- 30 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும். 5 வருடங்களிற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருத்தல் விரும்பத்தக்கது.
2. இயந்திர இயக்குனர்கள்
- 24 வயதிற்கு மேற்பட்டவராகவும். 2 வருடத்திற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருத்தல் விரும்பத்தக்கது.
3. தொழிற்சாலை தொழிலாளர்கள்
- 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், தொழில் பழகுவதற்கு ஆர்வமுள்ளவர் களாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற +94761419331 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது.



