பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வழங்கினார் பொறிஸ் ஜோன்சன்
பிரித்தானியர்கள் அண்மைய நாட்களில் தமது அன்றாட வாழ்வில் கடுமையான சவால்களை எதிர்நோக்கிவரும் பின்னணியில், மஞ்செஸ்டர் நகரில் இடம்பெற்றுவரும் கென்சவேட்டிவ்கட்சியின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்(Boris Johnson) வழங்கிய உரை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று நெருக்கடிக்குப் பின்னர் முதன் முறையாக கட்சியின் உறுப்பினர்கள் முன்னால் உரையாற்றிய அவர் ஒட்டுமொத்த பிரித்தானியர்களுக்கும் நல்வாய்ப்புகளை ஊக்குவிப்பதே கென்சர்வேட்டிவ் கட்சியின் பணி என சூளுரைத்துள்ளார்.
மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பிரதமர் போறிஸ் ஜோன்சன், நாடு தற்போது முன்னோக்கி பயணித்து வருவதாகவும், சம்பள அதிகரிப்பு, வினைத்திறனான உற்பத்தித்திறன், பணியாளர் உயர்நிலை தொழில்வான்மை என்பவற்றுடன் குறைவான வரி அறவீடுகள் என பல்வேறு நன்மைத்தனங்களை அரசாங்கம் செய்துவருகிறது.
சமூக மற்றும் பொருளாதாரத் துறையில் காணப்படும் மிகப் பெரிய பிரச்சனைகளை அரசாங்கம் உரிய வகையில் கையாண்டு தீர்வுகளை முன்னெடுக்கும்.
ஆனாலும் சுகாதாரத் துறையினை மேம்படுத்துவதற்கு சில வரிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. நாட்டில் மர நடுகையினை அதிகரிப்பதுடன், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதேவேளை பிரதமரின் உரை கேளிக்கையானது என எதிர்கட்சியான தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா சாம்பியன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரின் உரையில் நாட்டில் நீடிக்கும் எரிபொருள் பிரச்சினை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கான தீர்வுகள் குறித்து எந்த விடயங்களும் அடங்கவில்லை என சாரா சாம்பியன் சுட்டிக்காட்டியுள்ளார்.