சரணடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
இரண்டாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இரண்டு தனிநபர் பிணையில் வெளியேற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் வெளிநாடு செல்வதற்கு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அவர் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

