தாவரங்களின் மர்ம ஒலிகள்: டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில், நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மனிதர்களுக்குக் கேட்காத, விலங்குகளுக்கு மட்டுமே கேட்கக்கூடிய மர்மமான ஒலிகளை வெளியிடுகின்றன என்றும், விலங்குகளும் அந்த ஒலிகளுக்கு பதிலளிக்கின்றன என்றும் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியின் மூலம் வழங்கப்பட்ட ஒரு சான்றில், அந்துப்பூச்சிகள் போன்ற விலங்குகள் தாவரங்களால் வெளியிடப்படும் ஒலிகளைக் கேட்டு பதிலளிப்பதாக வெளிப்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தாவரங்கள் ஒலிகளை வெளியிடுகின்றன, விலங்குகள் அவற்றுக்கு பதிலளிக்கின்றன என்பது, இரண்டிற்கும் இடையில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு இருப்பதைக் குறிக்கிறது.
தாவரங்கள் வெளியிடும் ஒலிகள்
இருப்பினும், தாவரங்கள் வெளியிடும் ஒலிகள் மனிதர்களுக்குக் கேட்காது, அதே நேரத்தில் பல பூச்சிகள், வெளவால்கள் மற்றும் சில பாலூட்டிகள் அவற்றைக் கேட்பதாக தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யோசி யோவெல், தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
பெண் அந்துப்பூச்சிகள் சத்தம் எழுப்பும் தக்காளி செடிகளில் முட்டையிடுவதில்லை என்றும், ஏனெனில் அவை அத்தகைய சத்தங்களை எழுப்பும் தாவரங்களை ஆரோக்கியமற்றவை அல்லது பாதுகாப்பற்றவை என்று உணர்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில், தாவரங்கள் மன அழுத்தத்தையோ அல்லது ஆரோக்கியமற்றவையையோ உணரும்போது அழுகின்றன என்பதை அதே ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர்.
ஆராய்ச்சியன் வெளிப்பாடு
ஆராய்ச்சியில் வெளிப்படும் மற்றொரு உண்மை என்னவென்றால், தாவரங்கள் அவற்றின் உணர்வுகளுக்கு ஏற்ப ஒலிகளை எழுப்பினாலும், அவை உணர்திறன் கொண்டவை அல்ல, மேலும் ஒரு தாவரத்தால் எதையும் உணர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி ஒரு தாவரம் உண்மையில் அவற்றில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக ஒலிகளை உருவாக்குகிறது என்றும், விலங்குகளும் தாவரங்களும் ஒன்றுக்கொன்று இணக்கமாக பரிணமித்ததால் தாவரங்களால் ஏற்படும் ஒலிகளை விலங்குகள் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறப்படுகிறது.
மேலும், தாவரங்கள் உரத்த அல்லது சத்தமான ஒலிகளை எழுப்ப பரிணமிக்க முடியும், அத்தோடு, விலங்குகளும் அந்த ஒலிகளைக் கேட்க பரிணமிக்க முடியும்.
தாவரங்கள் உருவாக்கும் ஒலிகள் பற்றிய கூடுதல் தகவல்களை விலங்குகள் பெற முடியும் என்பதையும் இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

