மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி - இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல்
தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, நாளை மறுதினம் (13) யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, உடலநலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
இல்லத்தில் மக்கள் அஞ்சலி
இந்நிலையில் அன்னாரின் புகழுடல், யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் 13ஆம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரது புகழுடல் தகன கிரியைகளுக்காக நண்பகல் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த பாரதி இராஜநாயகம் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டதோடு அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)