யாழில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர்
யாழ்ப்பாணம் (Jaffna), ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளியும் ஊடகவியலாளரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என்பவரே நேற்று (25) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஊடகத் தோழமை
இவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கில் உள்ள ஊடகங்களிலும் அவர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளதுடன், ஊடகப் பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் ஊடகத் தோழமையின் திடீர் இழப்பு ஊடகத்துறை சமூகத்தினருக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |