படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு

Batticaloa Jaffna Journalists In Sri Lanka
By Sathangani Oct 19, 2024 01:32 PM GMT
Report

புதிய இணைப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்  24 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு | Journalist Mailvaganam Nimalarajan Commemoration

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடக்கின்ற போதிலும் இவரின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

இரண்டாம் இணைப்பு

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19.102024) அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொதுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

போர்ச்சூழலில் யாழில் இருந்து, துணிவாக ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை மற்றும் உள்நாட்டு  ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்

அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளை இவரது வீட்டினுள்  புகுந்த ஆயுத தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிர் துறந்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு | Journalist Mailvaganam Nimalarajan Commemoration

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 24 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் (Mylvaganam Nimalrajan) 24 வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பபில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு (Batticaloa) - காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவுத்தூபி அருகில் இன்று (19.10.2024) நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மட்டு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு

ஜனாதிபதியால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர் சுட்டிக்காட்டு


இதன்போது, அன்னாரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நினைவுச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்பு மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு | Journalist Mailvaganam Nimalarajan Commemoration

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை வரவேற்பதாகவும் அதனை துரிதப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறுக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி விசனம்

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறுக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி விசனம்

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்

சுமந்திரன் வைத்த செக்: சிறீதரனின் பதவிக்கு வந்த சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025