தமிழ்மக்களின் குரலாக ஒலித்த ஊடகவியலாளர் - முல்லை ஊடக மையம் அனுதாபம்
கொழும்பு தெகிவளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தினர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவு ஊடக அமையம் அனுதாப குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அனுதாப குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது சக ஊடக நண்பர் கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனின் பிரிவு செய்தி எம்மை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்மக்களின் குரலாக ஒலித்தவர்
ஊடகவியலாளராக கடமையாற்றிய நிபோஜன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த போராட்டங்கள், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் என தமிழ் மக்களது உரிமை சார்ந்த போராட்டங்களில் மக்களின் குரலாக ஒலித்த ஒரு சிறந்த ஊடகவியலாளராகவும் சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார்.
இந்த ஊடக நண்பனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து நிற்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது


