இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழி செம்மணியில்
இலங்கையில் இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியாக தற்போது அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புதைகுழி வளாகத்தில் இருந்து குழந்தைகள் உட்பட 166 பேரின் எலும்புக்கூடுகள் நேற்று வரை (ஓகஸ்ட் 26) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார (Harshana Nanayakkara), இலங்கையில் 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறித்த பெயர் விபரங்களையும் முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.
மன்னார் சதொச புதைகுழி
அந்த வகையில், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக தற்போது அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
அந்த புதைகுழி வளாகத்தில் இருந்து குழந்தைகள் உட்பட 166 பேரின் எலும்புக்கூடுகள் (ஓகஸ்ட் 26 வரை) அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழியாக கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 2013 ஆம் ஆண்டு 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி
கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
இங்கு குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 பேரின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

