காலம் கடந்த ஞானம்: அப்படி செய்திருக்கவே கூடாது : மகிந்த விட்ட தவறை இப்போது சுட்டிக்காட்டும் நாமல்
தனது தந்தையாரான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) ஆட்சிக் காலத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றஞ்சாட்டியிருக்க கூடாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தற்போது தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், ஜனவரி 2013 இல் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது
இது தெடார்பில் இன்று(27) செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அந்த நேரத்தில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறினார்.
“தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. அத்தகைய முடிவுகளுக்கு எங்கள் கட்சி இன்னும் விலை கொடுத்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
ஒருபோதும் பெரமுன ஆதரிக்காது
அரசியல் முடிவுகளை எடுக்க ஒரு தனிநபரை குறிவைக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், பெரமுன அதை ஆதரிக்காது.
இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
