கிழக்கில் திறக்கப்பட்ட அமெரிக்க கேந்திர நிலையம் (படங்கள்)
அமெரிக்கன் ஐஅப் (American ihub) எனப்படும் கேந்திர நிலையம் மட்டக்களப்பு கல்லடியில் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையமானது, மாணவர்கள், உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக் கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், விசேடமாக இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமை பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஐஅப்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கன் ஐஅப் (American ihub) எனப்படும் கேந்திர நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் அடுத்த தலைமுறையினர் கல்வி அறிவுடன் தொழில்நுட்ப அறிவையும் கொண்டிருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கமைய இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாகாணங்களில் இருந்த குறித்த நிலையம், தற்போது மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் ஜுலி சங்
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான 75 ஆண்டு கால உறவு பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக இந்த நிகழ்வின் போது உரையாற்றிய சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவின் 75 ஆவர் ஆண்டு பூர்த்தியாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் நாம் பல நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுத்துள்ளோம். எனினும், கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் அதிகளவில் நெருங்கி இலங்கையுடன் பயணிக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை முதன்மையாக கொண்டு நாம் இலங்கை மக்களுக்கு எமது ஆதரவுகளை வழங்கியுள்ளோம்.
பால் பொருட்களின் உற்பத்தி, மீனவ சமூகத்துக்கான உதவி, விவசாயிகளுக்கான ஆதரவு உள்ளிட்ட பல உதவிகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அத்துடன், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட சியோன் தேவாலாயத்துக்கும் நான் பயணம் செய்திருந்தேன்.
பொருளாதார நெருக்கடி
அம்பாறை வைத்தியாசலைக்கும் நான் பயணம் செய்திருந்தேன்.இன, மத வேறுபாடின்றி இலங்கையில் உள்ள மக்கள் கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதை என்னால் உணர முடிகிறது.

இலங்கை கடந்த சில நாட்களில் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பனருக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் உள்ள முக்கிய இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்றார்.












சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 13 மணி நேரம் முன்