சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி
இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள திருமதி எலிசபெத் கே ஹோர்ஸ்ட்,(Elizabeth K. Horst) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தான் நியமனம் செய்யப்பட்டால், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு(minority groups in Sri Lanka) ஆதரவளிப்பதாக நம்புவதாகத் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள்(human rights in Sri Lanka) தொடர்பான அமெரிக்காவின் கருத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு
இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை வழங்குவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக நடைபெற்ற அமெரிக்க செனட் வெளிநாட்டு உறவுகள் குழு கூட்டத்தில் திருமதி ஹோர்ஸ்ட் தனது ஆரம்ப அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கைக்கான தற்போதைய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்க்(julie chung) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |