சிறிலங்கா காவல்துறையின் பொய்யான கைது - நீதி அமைச்சர் கறார்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் சிலரை சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள் பொய்யான முறையில் கைது செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர், “சமீப காலமாக காவல்துறையினர் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பெருமளவிலான நபர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கை
ஆனால் அந்த சந்தேக நபர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றிய பொருட்கள் போதைப்பொருள் அல்ல. "உண்மையான கைதுகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
"சந்தேக நபர்களிடம் இருந்து "பனடோல்" தூள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. பழிவாங்கும் நடவடிக்கையாக காவல்துறைக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
நிலைமையை கண்காணிப்பதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்” - என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
