மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம்

Mannar SL Protest Hospitals in Sri Lanka
By Shadhu Shanker Nov 20, 2024 10:49 PM GMT
Report

 புதிய இணைப்பு

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த தாயிற்கு நீதி கோரி போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதிநிதிகள், அடங்களாக உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள், சட்டத்தரணிகள் ,மத தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் உயிரிழக்கும் வரை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் ஆட்சி மாற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு

இலங்கையின் ஆட்சி மாற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு

 உரிய தீர்வு 

மேலும் இம்மரணங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .இதன் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுத்து மூலம் தமது கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும்,மாகாண பணிப்பாளர் தனது விசாரணை குழுவை நியமித்து மூன்று நாட்களில் தமது விசாரணையை முடிப்பதாகவும்,வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இந்த விடயங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளடங்களாக அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாகாண பணிப்பாளர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.இந்த நிலையில் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

எனினும் இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்களை திசை திருப்பி தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர். இதனால் அங்கு மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினர்,விசேட அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் இணைந்து வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

இதனால் சில மணி நேரம் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணங்கள்: உண்மைகளை அம்பலப்படுத்திய சிறீதரன்!

தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணங்கள்: உண்மைகளை அம்பலப்படுத்திய சிறீதரன்!

முதலாம் இணைப்பு

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் (Mannar) பொது வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம் பெற்று வருகின்றது.

குறித்த போராட்டமானது, இன்று (20) மாலை 4.30 மணியிலிருந்து இடம் பெற்று வருகின்றது.

தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்று வந்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

 கலகம் அடக்கும் காவல்துறையினர்

அதனை தொடர்ந்து போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் கலகம் அடக்கும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயும் பிள்ளையும் மரணம் - யாழிற்கு அனுப்பபட்ட உடல்

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயும் பிள்ளையும் மரணம் - யாழிற்கு அனுப்பபட்ட உடல்

கொட்டும் மழையில்

போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இதேவேளை,மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேனுஜா திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (18) பிரசவத்திற்காக மன்னார் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது பிள்ளையும் தாயும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் வைத்தியசாலை இளம் தாய் சிந்துஜாவின் மரணம்: நீதிமன்றில் வெளி வந்த உண்மை

மன்னார் வைத்தியசாலை இளம் தாய் சிந்துஜாவின் மரணம்: நீதிமன்றில் வெளி வந்த உண்மை

யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!

யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                          
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026