மூன்றாவது முறையாகவும் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ??
கனடாவில் நடந்து முடிந்தள்ள 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச மற்றும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெற்றியின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்த சேவைகள் குறிப்பிட்டுள்ளன.
தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மொத்தமுள்ள 388 தொகுதிகளில் குறைந்தது 170 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே பெரும்பான்மை பெற முடியும்.
எனினும், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை விட 36 தொகுதிகளில் கூடுதல் வெற்றியினைப் பெற்றுள்ளது. அதாவது 157 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.
இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று எதிர்வு கூறியுள்ளது.
கனேடிய நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு 338 இடங்களில் 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.