மக்கள் நிராகரித்து விட்டார்கள் வீட்டில் ஓய்வெடுங்கள் : ரணிலுக்கு ஜே.வி.பி ஆலோசனை
Ranil Wickremesinghe
General Election 2024
Tilvin silva
By Sumithiran
“உங்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாது
“அரசியலமைப்பை எப்படி மீறுவது என்பது பற்றித்தான் ரணிலிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல்களை ஒத்திவைத்த அவருக்கு ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாது.
ரணிலின் ஆலோசனை தேவையில்லை
எனவே, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் பற்றி எமக்கு ரணிலின் ஆலோசனை தேவையில்லை.
தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட் டில் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்து நகைச்சுவையாளராக மாற வேண்டாம்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 9 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்