கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் வெளியாகும் செய்திகளை அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நிராகரித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) நேற்றைய தினம் (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது கட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான போலி வதந்திகளை பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சித்தாவல்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பலர் கட்சித்தாவல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமந்த பண்டார (Samantha Bandara) ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் அவர் பங்கேற்றதையடுத்து, குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.
போலி செய்திகள்
இதையடுத்து, குறித்த போலி செய்திகளை நிராகரித்த அனுரகுமார திசாநாயக்க, சமந்த பண்டார சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நபர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தததாக அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |