கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது - உடனடியாக அகற்றுங்கள்!

Parliament of Sri Lanka Sri Lanka Kachchatheevu
By Kalaimathy Mar 24, 2023 01:13 PM GMT
Report

கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது - உடனடியாக அகற்றுங்கள்! | Kachchatheevu Buddhist India Tamil Nadu Charles

கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இந்தியாவின் ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

கடந்த 3,4ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்றபோது. தமிழ்நாட்டில் இருந்து 2281 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

 இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பக்தர்களை நடத்திய விதம் மிகவும் கேவலமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தினால் கச்சதீவு திருவிழாவுக்கு வருபவர்களுக்காக 40 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வழங்கப்படவில்லை.

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது - உடனடியாக அகற்றுங்கள்! | Kachchatheevu Buddhist India Tamil Nadu Charles

இந்த ஏற்பாட்டை கடற்படையே செய்திருந்தது. தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவு வந்த அனைவரையும் தனியொரு கடற்படை உத்தியோகத்தரே பதிவை மேற்கொண்டுள்ளார். 4 மணித்தியாலங்கள் கடற்கரையில் இருந்தே ஆலயத்திற்கு அவர்களுக்கு செல்ல முடியுமாக இருந்தது.

இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென்றால் இது கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் அது அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருகின்றன. படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.


கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன். இதனை உடனடியாக அகற்ற வேண்டும். கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று பதில் வரலாம் கச்சத்தீவு திருவிழாவின் போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டது.

ஆனால் தமிழ் நாட்டில் இருந்தும் வடக்கு,கிழக்கில் இருந்து சென்றவர்களுக்கும் எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024