கிழக்கு மாகாணத்திற்கான எரிச்சக்தி துறை தொடர்பான திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்
நேற்றைய தினம்(16) காலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் எரிசக்தி துறை தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி துறை கொள்கைகள் தொடர்பான திட்டங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன், இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபை (SEA) ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

அத்துடன், தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம், வருங்கால திட்டங்களுக்கான திட்டங்கள், டிரான்ஸ்மிஷன் லைன்களின் மேம்பாடு, இது தொடர்பான ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துதல், பசுமை-ஹைட்ரஜன் தொடர்பான முதலீடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.