இந்தியாவில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
புதிய இனைப்பு
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற தொடருந்து விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து தொடர்பாக இந்திய அதிபர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது.
விரைந்து குணமடைய
எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது. காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
The news of the loss of lives due to a train accident in Darjeeling, West Bengal is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I pray for the speedy recovery of the injured and success of relief and rescue operations.
— President of India (@rashtrapatibhvn) June 17, 2024
மேலும், மேற்கு வங்க தொடருந்து விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "மேற்கு வங்க விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து பகுதிக்கு துறை சார் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 இலட்சமும், காயமுற்றவர்களுக்கு 50 ஆயிர்மும் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
— Narendra Modi (@narendramodi) June 17, 2024
முதலாம் இணைப்பு
இந்தியாவின் (India) இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்து இன்று (17) காலை மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
தொடருந்து சமிஞ்சை ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்புக் குழு
அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு ரங்கபாணி நிலையம் அருகே செல்லும் எக்ஸ்பிரஸ் தொடருந்து, பின்னால் வந்த சரக்கு தொடருந்துடன் மோதியதில் எக்ஸ்பிரஸ் தொடருந்தின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
இதற்கிடையில், மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு விரைவாக அழைத்துச் சென்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |