எல்லா தவறுகளுக்கும் காரணம் இவர்களே..! சாமான்ய ஈழத்தமிழனின் ஆதங்கம்
இன்று தமிழர்களிடம் இருக்கும் பலம் என்பது டயஸ்போரா தான் என ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், இங்கு இருந்து போர் காரணமாக குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்கள் தாய் மண் மீதும், தாய் மண்ணில் வசிக்கும் மக்கள் மீதும் பற்றுடன் இருக்கின்றார்கள் எனக் கூறியுள்ளார்.
அரசியல் தலைமைகள் ஒன்றுசேர்ந்து கட்டமைப்பாக இருப்பார்களேயானால், ஒரு அமைப்பை உருவாக்கி குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்களிடம் உதவிகளைப் பெற்று தாய் மண்ணின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முனையலாம் என அவர் கூறுகிறார்.
மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “ எங்களுடைய இனத்திற்கு என்று ஒரு செயல் வடிவ திட்டம் (கட்டமைப்பு) இல்லை. முதலில் எமது இனத்திற்கு என்று ஒரு செயல்வடிவ திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், அதனைத் தொடர வேண்டும். எமது அரசியல் தலைமைகள் அதனை உறுதிசெய்ய வேண்டும். புத்திஜீவிகள் குழாம் இணைந்து இந்த செயல் திட்டத்தை வடிவமைக்க வேண்டும்” - என்றார்.
சக்கர வியூகம் நிகழ்ச்சியின் முழுமையான பகுதி காணொளி வடிவில்,
பகுதி - 2
பகுதி - 1
