காங்கேசன்துறை - பாண்டிச்சேரி இடையேயான சரக்கு கப்பல் சேவைக்கு அனுமதி!
Sri Lanka
Government Of Sri Lanka
Government Of India
India
Ship
By Pakirathan
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு காங்கேசன்துறை பாண்டிச்சேரி இடையிலான கப்பல் சேவைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை ஆரம்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல் சேவை
இதேவேளை, காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தாமதம் அடைந்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் இருந்து கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறப்படுகின்றது.
