காரைநகர் – ஊர்காவற்துறை கடல் பாதை போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்
காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று (10) தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அடிக்கடி பழுதடைவதால் சிரமம்

இதற்கு அமைச்சர் உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு அமைய, போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால், இரு ஊர்களுக்கும் இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பொது மக்கள் , அரச உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

கடல் பாதையில் சுமார் 05 நிமிடத்தில் கடக்க கூடிய ஊருக்கு தரை வழிப்பாதையாக செல்வதாக இருந்தால் , சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்