தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உறுப்பினர்கள் நீக்கம்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர்களையு கட்சியிலிருந்து விலக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தவர் என்பதுடன் வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகும் இம்முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 10 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்