பிரிந்திருந்த கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில்(Batticaloa) உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சர்(கருணா அம்மான்) வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வானது இன்று (22.03.2025) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த தரப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(22) கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம், பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் தெய்வநாயகம் செந்தூரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்