பிள்ளையானின் கைதின் பின்னணியில் கருணா! அம்பலமாகும் இரகசியம்
கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் நேற்றையதினம் (08) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், இதே விவகாரம் தொடர்பில் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சிஐடி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது, விசாரணைகளை முடித்து விட்டு வெளியேறிய கருணா, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டமை குறித்து தன்னிடம் சில கருத்துக்களை சிஐடியினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அத்தோடு, தனக்கு தெரிந்த விடயங்களை தெளிவாக சிஐடியினருக்கு கூறியதாகவும் கருணா குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பிள்ளையானின் கைது நடவடிக்கைக்கு பின்னணியில் கருணா அம்மானும் இருக்கலாம் என்ற சந்தேகம் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட விடயத்தை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
