ஆணவம் பிடித்து செயற்பட்ட கோட்டாபய! அழிவுக்கு இதுதான் காரணம் என்கிறார் கருணா
கோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா சிறி ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
அத்தோடு, கோட்டாபய ராஜபக்சவை என்றுமே தாம் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் பிரதேசவாதம்
வேறு வழி இல்லாமல் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டமைக்கு இணங்கியே அதிபர் தேர்தலில் கோட்டாபயவிற்கு ஆதரவாக செயற்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிள்ளையான் பிரதேசவாதம் கொண்ட கருத்துக்களை வெளியிடுவதை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் அரசியல் ரீதியாக மேலும் முதிர்ச்சியடைய வேண்டிய நிலைகள் காணப்படுகின்றதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
மேலும், பிள்ளையானின் கருத்து பிரியோகங்கள் வார்த்தை பிரயோகங்களையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்