திடீரென பொதுவெளியில் வந்து கருத்து வெளியிட்ட கருணா!
அரசியல் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக ஈடுபடாத கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கருணா தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள எவரும் ஒற்றுமையுடன் செயற்படுவதில்லை எனவும் தான் நாடாளுமன்றம் சென்றால் சிறந்தமுறையில் பணியாற்றுவேன் எனவும் தன்னை பெருமிதமாக கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, விடுதலைப்புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று ஒற்றுமையின்மையின் விளைவாக பிளவடைந்து காணப்படுவதாகஅவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசாமல் தமது சொந்த பிரச்சினைகளை பிள்ளையான் மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் எடுத்துரைக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.