கறுப்பு ஜூலையின் முக்கிய சூத்திரதாரிகள்: அம்பலமாகும் உண்மைகள்
1983 இல் நடந்த ஜூலை இனப்படுகொலையில் முண்ணனியாக செயற்பட்டவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தகப்பனாரான ஆர்.பிரேமதாசதான் (R. Premadasa) என எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி (Karunanidhi) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1983 இல் நடந்த ஜூலை இனப்படுகொலை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் மாத்திரம் கட்டவிழ்க்கப்பட்ட ஒரு கலவரம் என அனைவரும் நினைக்கின்றனர்.
ஆனால், அது அவ்வாறு கிடையாது காரணம் யாருக்கும் உண்மை தெரியவில்லை, அந்த கலவரத்திற்கு முண்ணனியாக செயற்பட்டவர் ஆர்.பிரேமதாசதான்.
அவர்களினால்தான் தமிழ் மக்களின் அனைத்து வீடுகளும் தேடி தாக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் தங்களால் போராட முடியாததால் இங்குள்ள மக்களை தேடி தேடி அளித்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 1983 இல் நடந்த ஜூலை கலவரம், அன்றைய ஆட்சி பொறிமுறை, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவாக கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
