கரூர் வழக்கின் மீது திரும்பும் இந்திய அரசின் நகர்வு! விஜய்க்கு பாரிய சவால்
Vijay
TVK
By Dharu
கரூர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் திட்டத்தை தற்போதைய இந்திய அரசாங்கம் செயல்படுத்தி விஜய் மீதான அழுத்தத்தை திட்டமிட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
மக்களுடைய தீர்ப்புக்கு மத்தியில் விஜய் ஆட்சி அமைப்பதே சிறப்பான ஜனநாயகம் ஆகும். இதையே எமது கட்சியும் எதிர்பார்க்கின்றது. தி.மு.கவும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளது.
ஆளுநரின் செயற்பாடு
எனினும் தற்போதைய ஆளுநரின் செயற்பாடு அரசமைப்பு சட்டத்துக்கு அமைய இடம்பெற வேண்டும். ஆனால் ஆளுநரின் செயற்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன.

ஆளுநர் என்பவர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். இந்த செயற்பாட்டை பார்க்கையில் ஆளுநர் ஆட்சியை செயல்படுத்தி பா.ஜா.க உள்நுளைய முயற்சிப்பது தெளிவாகிறது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி