தரம் 6 மாணவர் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்ப கோரல்கள் நாளை ஆரம்பம்
2026 ஆம் ஆண்டிற்கான 6 ஆம் வகுப்பு மாணவர்களை பாடசாலைகளி்ல் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் நடைமுறை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 மே 8 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பிக்க வசதி
மேலும், http://g6application.moe.gov.lk என்ற இணைய இணைப்பின் ஊடாகவும் நேரடியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இணைய அமைப்பின் மூலம் நேரடியாக விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதால், தகுதியுடைய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்