லெபனானில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகுங்கள்! இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவு
தெற்கு லெபனானில் நீண்ட காலம் தங்கியிருக்கத் தயாராகுமாறு இஸ்ரேலியப் படைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமித்துள்ள பாதுகாப்பு மண்டலம் எனப்படும் பகுதியில், படைகளை தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும், லெபனான் இராணுவத்திடம் நிலப்பரப்பை ஒப்படைப்பதையும் நோக்கமாகக் கொண்ட, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவான ஒரு கட்டமைப்புக்கு இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பின்னர், இந்த முடிவு வெளிவந்துள்ளது.
இஸ்ரேல் காட்ஸ்
இதன்படி பாதுகாப்பு மண்டலத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கத் தயாராகுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு பிரதமரும் நானும் அறிவுறுத்தியுள்ளோம் என்று இஸ்ரேல் காட்ஸ் ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா அமைப்பு நிராயுதபாணியாக்கப்படாத வரை, தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளை மீண்டும் நிலைநிறுத்தவோ அல்லது திரும்பப் பெறவோ மாட்டாது என்று கூறிய அவர், இதை ஒப்பந்தத்தில் நிறுவப்பட்ட முக்கியமான கொள்கை என விவரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்