நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு
நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், இருந்தே வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளரின் அறிவிப்பு
எனினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெற்ற பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாயம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |