கொடூரமாக தாக்கப்பட்டு நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ள சிறுமி!
கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கண்டி - வத்தேகமவில் உள்ள யடிராவன வீதியில் இருந்து குறித்த சிறுமி இன்று(13) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையின் அவசர எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வத்தேகம காவல்துறையின்ர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று சிறுமியை மீட்டெடுத்தாக தெரிவித்துள்ளனர்.
சிசிரிவி மூலம் விசாரணை
காலை 7 மணியளவில் ஒரு முச்சக்கர வண்டியில் அச்சிறுமி அந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, சிறுமியை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி குறித்து சிசிரிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது தான் வசிக்கும் இடத்தைப் பற்றியோ அச்சிறுமிக்கு எந்தத் தகவலும் தெரியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதன்படி, குறித்த சிறுமி கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து வத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |