பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்
மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அபாயங்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்பவில்லை என்றும், எனவே அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை
"மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்தின் காரணமாக நான் எனது பதவியை இழந்தால், அதை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.," என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

"நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை புலனாய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? ஆனால் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன அல்லவா? அதில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் அறிவேன்," என்று ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |