சர்ச்சைக்குரிய பிக்குவால் வழங்கப்பட்ட போதி மரக்கன்று: சரத் வீரசேகர முன்னிலையில் நடப்பட்ட விநோதம்
Mullaitivu
Sarath Weerasekara
By Dharu
வடக்கின் முல்லைத்தீவு வெலிஓயா (மணலாறு) கிரிஇப்பன்வெவ கும்பகர்ணகல பகுதியில் அமைந்துள்ள பழைமையான பௌத்த விகாரைக்கு அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையின் போதி மரக்கன்று ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.
புராணவியல் அறிக்கைகளில் ‘கும்பசால லென’ என குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழைமையான இடிபாடுகளைக் கொண்ட விகாரை வளாகத்தை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதி மரக்கன்று சரத் வீரசேகரவிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது, சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன பிக்குவினால் என கூறப்படுகிறது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |