உலக சந்தையில் சடுதியாக சரிவைக்கண்ட கச்சா எண்ணெய் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.
முக்கிய கச்சா எண்ணெய் வகைகளின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தை தரவுகளின்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 99.43 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
உலக எண்ணெய் சந்தையில் தாக்கம்
அதேவேளை, WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 93.17 அமெரிக்க டொலராகவும், மெர்பன் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 96.20 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இந்த விலைகள் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலைகளும் உலக எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சங்களைக் கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அதேசமயம், லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையிலும், இஸ்ரேல் நேற்று (06.05.2026) லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் நகர்ப்புறப் பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள வர்த்தகக் கப்பல்களை மீட்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ‘ஒபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை கைவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |