முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது!
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (25) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, நீதிபதியை கொண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுத் தருமாறு நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாய் இலஞ்சத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த நிலையில் சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |