ஹோர்முஸ் நீரிணையில் பிரித்தானிய கப்பல் மீதும் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் மீது இன்று (27) அடையாளம் தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் மீதும் தாக்குதல்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலை ஈரானே நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகளால் நேற்று (26) ஈரானில் உள்ள சில இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
எனினும் பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம் மிது தாக்குதலை நடத்தியிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்